Thursday, 26 October 2017

இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும்..

  இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும்
நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளித்ததற்காக, பிரச்சாரம் செய்ததற்காக நான் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரர் இது வரை பிரதமர் ஆனதே கிடையாது.

என் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றேன்.

மரண வாயிலில் நிற்கின்றேன், எனக்கு வயது 93. பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வைத்து விட்டேன். இந்த உலகத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமாகி விட்டேன்.

அப்படி நான் போவதற்கு முன்பு, இந்த நரேந்திர மோடி கூட்டம் இனி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை வழிகளிலும் போராடுவேன்....


 ராம் ஜெத்மலானி 

No comments:

Post a Comment

SPIDER